Latestமலேசியா

ஆட்டத்தின் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் முதல் 10 அணிகள்!

கோலாலம்பூர், டிசம்பர் 24 – ஆட்டம், ஆஸ்ட்ரோவின் பிரத்தியேக உள்ளூர் தமிழ் ரியாலிட்டி நடனப் போட்டியின் ஐந்து மற்றும் ஆறாவது அத்தியாயத்தில் 11 அணிகளுக்கு இடையிலானக் கடுமையானப் போட்டிக்குப் பிறகு ‘காதல்’ என்றக் கருப்பொருளைக் கொண்ட அடுத்தச் சுற்றுக்கு முதல் 10 அணிகள் முன்னேறின.

 

 

 

 

டிசம்பர் 21 மற்றும் 22, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் ‘தளபதி’ என்றக் கருப்பொருளைக் கொண்ட ஐந்தாம் மற்றும் ஆறாம் அத்தியாயங்கள் முதல் ஒளிபரப்புக் கண்டன.

சிறந்த 10 அணிகளின் விபரங்கள் பின்வருமாறு:

ஒவ்வொரு அணிக்கும் நடுவர்கள் 60% மதிப்பெண்களும் அணித் தலைவர்கள் மீதமுள்ள 40% மதிப்பெண்களையும் வழங்கினர்.

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, கம்போடியா, மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பல நடனப் படைப்புகளை வழங்கியது மட்டும்மல்லாமல் பரதநாட்டியம், ஒடிசி மற்றும் பாலே ஆகியவற்றில் விரிவான அனுபவமுள்ள உள்ளூர் நடனக் கலைஞர் சிவகாமவல்லி, சிறப்பு நடுவராக அழைக்கப்பட்டார்.

சிங்கப்பூரின் நடனக் கலைஞர், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் மற்றும் ஆட்டம் 100 வகை சீசன் 3-இன் வெற்றியாளர்களில் ஒருவரான ராமேஸ்வரா மற்ற இரு உள்ளூர் நடுவர்களானப் புகழ்பெற்ற நடனக் கலைஞர், நடன இயக்குனர், மற்றும் நடிகர் எம்.ஜே. நாடா; தொகுப்பாளர், நடனக் கலைஞர், உள்ளூர் நடனப் பள்ளியின் இணை நிறுவனர் மட்டும்மல்லாது ஆட்டம் 100 வகையின் தொகுப்பாளருமான, அருணா ஆகியோருடன் இணைந்து நடுவராகப் பொறுப்பேற்றார்.

ஆட்டம் போட்டியின் வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்:

  • முதலாம் பரிசு: RM 50,000.00
  • இரண்டாம் பரிசு: RM 25,000.00
  • முன்றாம் மற்றும் நான்காம் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா RM 5,000.00
  • ஐந்தாம் மற்றும் ஆறாம் பரிசுகள்: ஒவ்வொரு குழுக்கும் தலா RM 2,000.00

ஆட்டம் நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!