கிகாலி, அக்டோபர்-2, ஆப்பிரிக்க நாடுகளை வைரஸ் கிருமிகள் அடுத்தடுத்து விடாது துரத்துகின்றன.
ஏற்கனவே mpox எனும் குரங்கம்மை ஏற்படுத்திய பீதியே இன்னும் அடங்காத நிலையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் மார்பர்க் (Marbug) எனப்படும் அதிக வீரியம் கொண்ட நோய்க் கிருமி முதன் முறையாகப் பரவி வருகிறது.
பழ வெளவால்களில் இருந்து உருவாகியதாகக் கூறப்படும் இந்த கொடிய மார்பர்க் வைரஸ், நெருங்கிய தொடர்பு மூலம் மக்களிடையே பரவுகிறது.
அந்நாட்டின் 30 மாவட்டங்களில் இதுவரை 7 மாவட்டங்களில் நோய்ப் பரவல் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
8 பேர் மரணமடைந்து 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நோய்க் கிருமி தாக்கினால், இரத்தக் கசிவுடன் காய்ச்சலும் ஏற்படுகிறது.
88 விழுக்காட்டுக்கு மரண ஆபத்தும் உள்ளது.
என்றாலும் இதற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ சிகிச்சை முறைகளோ இதுவரை இல்லை.
இந்த வைரஸ் இதுவரை தான்சானியா, கோங்கோ, கென்யா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.