கோலாலம்பூர், டிச 12 – பேராவில் Mualim மாவட்டத்தில் ஆயுதமேந்திய கொள்ளைச் செயல்களில் தீவரமாக ஈடுபட்ட வந்த இருவர் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டனர். 29 மற்றும் 37 வயதுடைய அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் 2023 ஆம் ஆண்டு முதல் தஞ்சோங் மாலிம், பெஹ்ராங் மற்றும் சிலிம் ரீவர் பகுதிகளில் கும்பலாக 20 கொள்ளை மற்றும் 10 வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டது தொடர்பில் தீவிரமாக தேடப்பட்டவர்கள் என்று பேரா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் சுல்கப்லி சரியாட் ( Zulkafli Sariaat ) தெரிவித்தார்.
Op Casa Mualimமில் போலீசார் குற்றத்தடுப்பு ரோந்துப் பணியை மேற்கொண்ட போது, விடியற்காலை மணி 5.20 அளவில் , புரோட்டான் பெர்சோனா காரில் சந்தேகப்படும்படியாக இருவர் சென்றதைத் தொடர்ந்து அக்காரை பேரா போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த குழுவினர் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றபோது அக்கார் கவிழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து முதலாவது சந்தேகப் பேர்வழி இரண்டு முறை தனக்கு முன்னாள் இருந்த போலீஸ் வாகனத்தை நோக்கி சுட்டான். அந்த காரில் முன்பகுதியில் அமர்ந்திருந்த இரண்டவாது சந்தேகப் பேர்வழி காரிலிருந்து இறங்கி பெரிய பாராங் கத்தியை எடுத்துக்கொண்டு போலீஸ்காரர்களை தாக்குவதற்கு ஓடி வந்தான்.
இதன் காரணத்தினால் தங்களை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு மூன்று முறை போலீசார் சுட்டதாக சுல்கப்லி சரியாட் கூறினார். அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி ,இரண்டு தோட்டாக்கள், இரணடு பாரங் கத்திகள், கையுறை, வாகனங்களின் இரண்டு போலி பதிவு எண் பட்டைகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.