
அலோஸ்டார், ஏப் 3 – வெளிநாட்டைச் சேர்ந்தவர் என நம்பப்படும் வயதான ஆடவரின் சடலம் சுங்கை ராஜா ஆற்று நீர் குழாய் அருகே கண்டுப்பிடிக்கப்பட்டது. நேற்று மதியம் 12.43 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு போலீஸ் குழு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சித்தி நோர் சலாவத்தி ( Siti Nor Salawati Saad ) தெரிவித்தார்.
அந்த ஆடவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் சில நாட்களுக்கு முன் அவர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. 70 வயதுடைய அந்த நபரின் மோட்டார் சைக்கிளோட்டும் லைசென்ஸ் கண்டுப்பிடிக்கப்பட்டதோடு மார்ச் 23 ஆம்ததி அவர் காணவில்லைனெ அவரது குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார் செய்திருந்தாக Siti Nor கூறினார்.