Latestஉலகம்

ஆஸ்திரேலியக் கேளிக்கைப் பூங்காவில் புலி தாக்கி விலங்கு பராமரிப்பாளர் காயம்

சிட்னி, செப்டம்பர் -2 – ஆஸ்திரேலியாவின் Dreamworld கேளிக்கைப் பூங்காவில் புலி தாக்கியதில், விலங்குப் பராமரிப்பாளர் காயமடைந்துள்ளார்.

கைகளில் படுகாயமுற்ற அப்பெண் பணியாளர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

30 வயது அப்பெண் கைகளில் கீறல்கள் விழுந்தன;

மற்றபடி அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக Queensland அம்புலன்ஸ் தரப்பு கூறியது.

காயமடைந்தவர் புதியப் பணியாளர் அல்ல; புலிகளைப் பராமரிப்பதிலும் கையாளுவதிலும் நன்கு பயிற்சிப் பெற்றவர் ஆவார்.

எனவே, அபூர்வமாக நடந்த சம்பவமாக அதனைக் கருதி விசாரணை நடைபெறுவதாக கேளிக்கைப் பூங்கா நிர்வாகம் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!