
கடந்த 11 – ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் ஒன்று கூடும் உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு ஆஸ்திரேலியாவில் சிட்னியில் டிசம்பர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் இந்திய அரசு, தமிழக அரசு அனுசரணையுடன் 12 வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு ஆஸ்திரேலியா சிட்னியில் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்கள் பல்வேறு நாடுகளைச் சார்ந்த வர்த்தக ஆணையங்கள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழக அரசு நிறுவனங்கள் மற்றும் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோர், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரங்கம் அமைத்து காட்சிப்படுத்தப்பட உள்ளனர்.
இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நம் தமிழர்கள் கலை, கலாச்சாரம், பொருளாதாரம் மேம்பாடு, வர்த்தகம் போன்ற துறைகளில் மேம்படவும் எந்த நாட்டில் என்னென்ன தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அறியும் வகையில் வர்த்தக கண்காட்சி, பிஸ்னஸ் மீட், வர்த்தக கருத்தரங்கம், போன்றவர்களை உள்ளடக்கி இந்நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில மத்திய அமைச்சர்கள், தொழில்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அனைத்து துறை சார்ந்த அரங்கங்களும் வல்லுனர்களும் பங்கேற்கும் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு உலகத் தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
தொடர்புக்கு +6016167708 என்ற எண்ணிலும் இலங்கையிலிருந்து வர்த்தகர்கள் கலந்து கொள்ள ஏதுவாக இவ்வமைப்பின் ஊடகத் தொடர்பாளர் தியாகு, +94777757815 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செல்வக்குமார் தெரிவித்தார்.