Latestமலேசியா

இணைய காதல் மோசடி; 67 வயது பெண் RM2.21 மில்லியன் இழந்தார்

கோலாலம்பூர், டிச 17 – 67 வயது பெண் ஒருவர் இணைய காதல் மோசடிக்கு
உள்ளாகி , தனது ஆன்லைன் காதலனிடம் ஏழு ஆண்டுகளில் 2.21 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளார்.

ஒரு கணக்காய்வாளரான அந்த பெண்மணி 306 பரிவர்த்தனை மூலம் தனது பணத்தை 50 வெவ்வேறு வங்கிகளுக்கு பட்டுவாடா செய்துள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ரம்லி யூசுப் (Ramli Yoosuf ) தெரிவித்தார்.

கடந்த மாதம் தனது தோழியிடம் பேசியபிறகு தாம் மோசடிக்கு உள்ளானதை அப்பெண் உணர்ந்து நேற்று இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சமூக ஊடகம் மூலமாக அறிமுகமான ஆடவன் தாம் அமெரிக்காவில் இருப்பதாக கூறிக்கொண்டதைத் தொடர்ந்து தாங்கள் நண்பர்களாகியதாக அந்த பெண்மணி தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு மருத்துவ சாதனங்களை விநியோகித்துவரும் ஒரு வர்த்தகர் என அந்த ஆடவன் கூறிக்கொண்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரம்லி தெரிவித்தார்.

அவர்களது இணைய நட்புறவு வளர்ந்து பிறகு சொந்த மற்றும் வர்த்த விவகாரம் தொடர்பாக அடிக்கடி நிதி உதவியை அப்பெண்ணிடம் அந்த ஆடவன் நாடியிருக்கிறான்.

சபாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்த பெண் அந்த ஆடவனுக்கு உதவுவதற்காக தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பணத்தை கைமாற்றாகவும் வாங்கியிருப்பதாக ரம்லி தெரிவித்தார்.

இதனிடையே இதே போன்ற மற்றொரு இணைய காதல் மோசடி சம்பவத்தில் 2.47 மில்லியன் ரிங்கிட் இழந்தாக நவம்பர் 28ஆம் தேதி 57 வயது பெண்மணி ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளதாகவும் ரம்லி அம்பலப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!