கிள்ளான், செப்டம்பர் 27 – இந்தியச் சிறுதொழில் வணிகர்களின் மேம்பாட்டிற்காக ஐ-பேப் திட்டத்தின் கீழ் கூடுதலாக 6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை, துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று அறிவித்தார்.
தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் கீழ் இயங்கும் எஸ்.எம்.இ கோர்ப் வாயிலாக இந்த நிதி ஒதுக்கப்படுகிறது.
அதன்படி, 1 லட்சம் ரிங்கிட் வரை, குறு, சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு இந்த உதவித் தொகை grand வடிவில் வழங்கப்படும் என்றார், அவர்.
தெக்குன் ஸ்பூமி கோஸ் பிக், அமானா இக்தியார் பெண் திட்டம், பேங்க் ரக்யாத் பிரிவ்-ஐ திட்டங்களைப் போல, அமைச்சு தற்போது இந்திய சிறு வணிகர்களுக்காக மேம்படுத்தியுள்ள இந்த திட்டமும் பயனாக அமையும் என்றார், அவர்.
இந்த நிதியைக் கொண்டு இந்தியச் சிறுதொழில் வர்த்தகர்கள் தங்களின் வணிகத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பாக, வணிகத்திற்குத் தேவைப்படும் இயந்திரங்கள் உட்பட இதர பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்றார், அவர்.
இந்நிலையில், இந்த நிதி விண்ணப்பத்திற்கு, ஆண்டுக்கு 3 லட்சம் ரிங்கிட் வரை வியாபாரத்தை மேற்கொள்ள வேண்டுமென்றும் அதற்கான விதிமுறைகளை இவ்வாறு விளக்கமளித்தார்.
எதிர்வரும் அக்டோபர் 7ஆம் திகதி முதல் இந்த ஐ-பேப் திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு காலம் திறக்கப்படுகிறது.
ஆகவே, விரைந்து இந்த ஐ-பேப் திட்டத்தின் வாயிலாக நிதிகளுக்கு விண்ணப்பம் செய்து தங்களின் வணிகத்தை அடுத்த நகர்வுக்குக் கொண்டு செல்லுமாறு டத்தோ ஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.