புது டெல்லி, அக்டோபர்-6, உலகப் புகழ்பெற்ற பார்பி (Barbie) பொம்மைகள், தீபாவளியை முன்னிட்டு இந்திய ஒப்பனைக்கு மாறியுள்ளன.
அனிதா டோங்ரே (Anita Dongre) எனும் வடிவமைப்பாளரின் முயற்சியில், இந்திய ஆடையில் ஜொலிக்கும் பார்பி பொம்மைகள் அமெரிக்கச் சந்தைகளில் அறிமுகம் கண்டுள்ளன.
Barbie Diwali Doll என்ற பெயருடன் விற்பனைக்கு வந்துள்ள அம்பொம்மைகள், இந்தியப் பாரம்பரிய உடைகளில் ஒன்றான lehenga-வில் ஜொலிப்பது பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் அடையாளமான vest மேலங்கியும் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
தவிர, வளையல், தொங்கும் பெரியத் தோடு, பொட்டு என இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த தீபாவளி பார்பி பொம்மைகள் பட்டையைக் கிளப்புகின்றன.
இந்திய பாரம்பரியத்தை மறக்காத ஒரு நவநாகரிகப் பெண் என்ற கருப்பொருளில் தயாராகியுள்ள இந்த பார்பி பொம்மைகள், உலகெங்கும் உள்ள குழந்தைகளை அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைக்க ஊக்குவிக்கும் என, அனிதா நம்புகிறார்.
விற்பனைக்கு வந்த வேகத்திலேயே அவை இணையத்தைக் கலக்கி வருகின்றன.
இந்த பொம்மையின் விலை 49.99 அமெரிக்க டாலராகும், அதாவது மலேசிய ரிங்கிட்டுக்கு சுமார் 210 வெள்ளி.