
ஜோகூர் பாரு, மார்ச் 30 -இந்திய சமூக வல்லுநர்களுடனான சந்திப்பு’ என்ற நிகழ்ச்சியில் ஜோகூர் மந்திரிபுசார் , மாநிலத்தின் சமூக – பொருளாதார மேம்பாடு , கல்வி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தொழில் வாய்ப்புகளை வலுப்படுத்தும் முயற்சியில், இந்திய சமூக வல்லுநர்களின் கருத்துக்களைக் கேட்பதற்கும், யோசனைகளைப் பகிர்வதற்கும், பல்வேறு ஆலோசனைகளை விவாதிப்பதற்கும் நடைபெற்ற சந்திப்பு ஆக்கப்பூர்வமான முடிவை தந்ததாக ஜோகூர் ம.இ.கா தலைவரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ ரவின்குமார் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
2030- ஆண்டில் ஜோகூர் வளர்ச்சி பெறவேண்டும் என்ற இலட்சியங்களுக்கு ஏற்ப, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து முன்னேறுவதற்கான கவனத்தையும் வாய்ப்புகளையும் பெறுவதை உறுதி செய்வதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மந்திரிபெசர் டத்தோ ஓன் ஹபீஸ் காசி ( Onn Hafiz Gazi ) அவர்களுக்கு எங்களது ஆழ்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தக் கலந்துரையாடலின் முடிவுகள், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயனளிக்கும் மற்றும் ஜோகூர் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முன்னெடுப்புகளாக மாற்றப்படும் என நம்புகிறோம் என ரவின்குமார் தமதுரையில் சுட்டிக்காட்டினார்.



