Latestமலேசியா

இந்திரா காந்தி மகள் விவகாரத்தில் சட்டத்தின் மாண்பு கட்டிக்காக்கப்பட வேண்டும் – PKR சிவமலர் வலியுறுத்து

கோலாலம்பூர், நவம்பர்-23 – மதம் மாறிய முன்னாள் கணவரின் செயலால் 16 ஆண்டுகளாக மகளைப் பிரிந்திருக்கும் இந்திரா காந்தியின் வேதனை நீடிக்கக் கூடாது.

அவருக்கான நீதி இனியும்
தாமதமாகக் கூடாது என, பி.கே.ஆர் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி வலியுறுத்தியுள்ளார்.

அவ்வழக்கை தாம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கூறிய சிவமலர், இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை தேடும் நடவடிக்கையை நாடு முழுவதும் விரிவுபடுத்த ஈப்போ உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்றார்.

தலைமறைவாக இருந்தாலும் அவ்வாடவர் அரசு உதவித் திட்டங்களான Sara மற்றும் Budi95 பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, உள்துறை அமைச்சு, போலீஸ் மற்றும் அனைத்து மாநில அரசாங்கங்களும் இணைந்து அந்நபரை தேடிக் கண்டுபிடித்து, இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா தீக்ஷாவை, நீதிமன்ற உத்தரவின்படி திரும்பக் கொண்டுவர வேண்டும் என சிவமலர் கேட்டுக்கொண்டார்.

இவ்விவகாரத்தில், சட்டத்தின் மாண்பு மதிக்கப்பட வேண்டும் என்றும், நீதிமன்ற தீர்ப்புகள் எந்த சமரசமும் இன்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், பி.கே.ஆர் மத்தியத் தலைமைத்துவ மன்ற உறுப்பினருமான அவர் வலியுறுத்தினார்

இந்த நடவடிக்கை, நீண்ட கால வேதனையை முடிவுக்குக் கொண்டுவரும் திருப்புமுனையாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை கிளந்தானில் மட்டுமே தேடுவதை விடுத்து, நாடு முழுவதும் தீவிரமாகத் தேடி விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!