Latestமலேசியா

இந்துக் கோவில் நில பிரச்னை குறித்த கலந்துரையாடல்; பிரதமருக்கு Dr குணராஜ் நன்றி

கோலாலம்பூர், மார்ச்-14 – இந்து கோவில் நில பிரச்னையைத் தீர்க்க பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகம் எடுத்த முயற்சிக்கு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மார்ச் 12-ஆம் தேதி புத்ராஜெயாவில் நடைபெற்ற சந்திப்பில், பிரதமரின் அரசியல் செயலாளர் Chan Ming Kai கலந்து கொண்டார்.

இந்த சந்திப்பு, இந்து சமூகத்தின் கவலைகளை அரசு கேட்டு, நடைமுறை மற்றும் ஒற்றுமையான தீர்வுகளைத் தேடுவதில் காட்டும் திறந்த மனப்பான்மையை பிரதிபலிக்கிறது.

நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த பிரச்னைக்கு இந்து கோவில்களுக்கான தேசிய வழிகாட்டிக் குழுவான NHTSC-வுடன் இணைந்து, ஒழுங்குமுறையான மற்றும் நியாயமான தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கையை குணராஜ் வெளிப்படுத்தினார்.

மேலும், ஒற்றுமை, புரிதல் மற்றும் கட்டுமான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து ஆதரிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

NHTSC, முன்னதாக அச்சந்திப்பில் கோவில் நிலம் தொடர்பான நீண்டகால பிரச்னைகளை முன்வைத்தது.

பிரதமருக்கு எழுத்துப்பூர்வமாக பல பரிந்துரைகளையும் அது வழங்கியது.

பதிவுச் செய்யப்படாத கோவில்களுக்கு “Kuil Tanpa Pendaftaran Tanah” என்ற புதிய நிர்வாகச் சொல்லை ஏற்றுக்கொள்வது, குறைந்தது 6 மாதங்களுக்கு அமுலாக்க நடவடிக்கைகளை நிறுத்தும் moratorium உத்தரவு மற்றும் இந்த வழிகாட்டிக் குழுவை தேசிய ஒருங்கிணைப்புக் குழுவாக அங்கீகரிப்பது உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!