கோம்பாக், செப்டம்பர் 5 – மூன்று திருடர்கள், கடந்த திங்கட்கிழமை கோம்பாக், தாமான் பாத்துவில் (Taman Batu) உள்ள வீடமைப்பு பகுதியில் 44 வயதுடைய இந்தோனேசியப் பெண்ணின் இருசக்கர வண்டியைச் திருடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த பெண்ணின் முகத்தில் திரவியம் ஒன்றைத் தெளித்து அவரை நிலை தடுமாறி கீழே விழ வைத்து வண்டி திருடப்பட்டுள்ளது.
முன்னதாக மாலை 6 மணி வாக்கில், அந்த இந்தோனேசியப் பெண் தனது இருசக்கர வண்டியில் தாமான் கிரீன்வுட்டில் (Taman Greenwood) தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, இரண்டு இருசக்கர வண்டியில் அவரைப் பின் தொடர்ந்துள்ளனர் அந்த திருடர்கள்.
அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண்ணுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.