Latestமலேசியா

இப்ரானி மொழிபெயர்ப்பாளர் கோரியதால் இஸ்ரேல் ஆடவருக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

கோலாலம்பூர், ஜன 7 – ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இஸ்ரேலிய பிரஜை அவிட்டன் ஷாலோம் மிற்கு (Avitan Shalom ) ibrani மொழிபெயர்ப்பாளர் ஒருவரை தயார்படுத்துவதற்காக அவர் மீதான விசாரணையை செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது. தனக்கு அடிப்படை ஆங்கிலம் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்பதால் விசாரணை முழுமைக்கும் இப்ரானி மொழிபெயர்ப்பாளர் தேவையென 39 வயதுடைய Avitan கூறிக்கொண்டார். இந்த விவகாரத்தை எழுப்புவதற்கு எதற்கு 9 மாதங்கள் காத்திருந்தீர்கள் என Avitan னிடம் நீதிபதி நோரினா ஜைனால் அபிடின் (Norina Zainal Abidin ) கேள்வி எழுப்பினார். இதற்கு முன் மொழிபெயர்ப்பாளர் பிரச்சனை எழுப்பப்படவில்லை. உங்களுக்கு மொழி பெயர்ப்பாளர் தேவை என்று நீங்களோ அல்லது உங்கள் வழக்கறிஞரோ நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். எனினும் , தனக்கு ஆங்கிலம் சரியாகப் புரியவில்லை என்று தனது வழக்கறிஞரிடம் பலமுறை தெரிவித்ததாக Avitan நீதிமன்றத்தில் கூறினார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 270வது பிரிவு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு புரியாத மொழியில் விளக்கம் அளிக்கப்பட்டால், அவருக்கு மொழிபெயர்ப்பாளரைக் கொடுக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது என்று Avitan னின் வழக்கறிஞர் Naran Sing வாதிட்டார். எங்களுக்கு ஒரு Hibru மொழிபெயர்ப்பாளரை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட நபர் விசாரணையை புரிந்துகொள்வதற்கு மொழிபெயர்ப்பாளர் அவசியம் தேவையென அவர் வலியுறுத்தினார். இந்த கோரிக்கை தொடர்பில் அரசு தரப்பு வழக்கறிஞர் முஸ்தபா குன்யாலம் ( Mustaffa kunyalam ) ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அதே வேளையில் Hibru மொழிபெயர்ப்பாளர் கண்டுப்பிடிக்கப்படாவிட்டால் வழக்கு விசாரணை எளிமையான ஆங்கிலத்தில் நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!