ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர்-18 – புயல் காற்று போன்ற இயற்கைப் பேரிடர்களால் மரங்கள் விழுந்து பாதிக்கப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு, பினாங்கு மாநகர மன்றம் (MBPP) இழப்பீடு வழங்காது.
இயற்கைப் பேரிடர் அல்லாமல் திடீரென மரங்கள் விழுந்து ஏற்படும் பாதிப்புகளுக்கே இழப்பீடு உண்டு என, பினாங்கு மேயர் டத்தோ A.ராஜேந்திரன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
கனமழை மற்றும் புயல் காற்றால் பினாங்கு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சுமார் 200 மரங்கள் வேரோடு சாய்ந்ததாக, முதல் அமைச்சர் Chow Kon Yeow முன்னதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று மாநகர மன்ற கட்டடத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ராஜேந்திரன் அவ்வாறு சொன்னார்.
இவ்வேளையில், இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை சாலையோரங்களில் ஆரோக்கியமற்ற 86 மரங்கள் வெட்டப்பட்டன.