
கோலாலாம்பூர், ஜனவரி-26-ஒருவர் இறந்துவிட்டால், நிலுவையில் உள்ள அவரின் வருமான வரிகளை அவரது வாரிசுகள் கட்ட வேண்டிய கட்டாயமாகும்.
செலுத்தப்படாத நிலுவைத் தொகைகள், சொத்துப் பிரிப்பு அல்லது வாரிசு உரிமைகள் பெறுவதற்கு முன் தீர்க்கப்பட வேண்டும்.
வாரிசுகள், சொத்து தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது, நிலுவை வரி விவரங்களையும் சரிபார்க்க வேண்டும்.
அப்போது வரி செலுத்தப்படாமல் இருந்தால், சொத்து பிரிப்பு நடைமுறை தாமதமாகும்.
மலேசிய இஸ்லாமிய சமய விவகாரஙளுக்கான தேசிய ஆலோசனை மன்ற செயற்குழுவின் 122-ஆவது கூட்டத்தில் இது முடிவெடுக்கப்பட்டதாக, Berita Harian சிறப்பு செய்தியில் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், அரசாங்க வருவாய் பாதுகாக்கப்படுவதோடு, சட்டப்படி உரிய பொறுப்புகள் நிறைவேற்றப்படுவதும் உறுதிச் செய்யப்படுவதாக அச்செயற்குழு கூறிற்று.
இந்நடைமுறை, வரி ஒழுங்குமுறையை வலுப்படுத்தவும், வாரிசுகள் சட்டப்படி பொறுப்புகளை ஏற்கவும் முக்கியமானதாகும்.



