தஞ்சாவூர், அக்டோபர்-20, தமிழகத்தின் தஞ்சாவூரில் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட 105 வயது பாட்டி திடீரென எழுந்து உட்கார்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மாரியாயி பாட்டி, எந்த அசைவுமின்றி இருந்ததால் அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் நினைத்தனர்.
இதனால் இறுதிச் சடங்கு செய்வதற்கு உறவினர்கள் தயாரான நிலையில், மாரியாயி திடீரென எழுந்து உட்கார்ந்தார்.
அதைகண்டு உறவினர்களும் கிராம மக்களும் அதிர்ச்சி கலந்த சந்தோஷம் அடைந்தனர்.
நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்த மாரியாய் பாட்டி தற்போது உடல்நலம் தேறி, தனது வேலைகளை அவரே செய்து வியப்பூட்டி வருவதாக news@18தமிழ்நாடு செய்தி வெளியிட்டுள்ளது.