
இஸ்லாமாபாத், டிசம்பர்-3 – கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் சீரழிந்துள்ள இலங்கைக்கு பாகிஸ்தான் அனுப்பிய நிவாரண உதவி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் வெளியிட்ட புகைப்படங்களில், இலங்கைக்கான நிவாரண பெட்டிகள் காணப்பட்டன.
ஆனால் அந்த பெட்டிகளில் சில பொருட்களின் காலாவதி தேதி அக்டோபர் 2024 என்று தெளிவாக இருந்ததை வலைத்தளவாசிகளின் கழுகுப் பார்வையில் பட்டு விட்டது.
இதனால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது.
நிவாரணம் என்ற பெயரில் இலங்கைக்கு “காலாவதியான பொருட்களைப்” அனுப்புவதாதாக இணையவாசிகள் குற்றம் சாட்டினர்.
சிலர் அதை மனிதேநேயத்துக்கு எதிரான செயல் என்று குறிப்பிட்டனர்.
அதிக விமர்சனம் எழுந்ததால், பாகிஸ்தான் உயர் ஆணையம் அப்பதிவை பின்னர் அகற்றியது.
ஆனால் scrinshot-கள் ஏற்கனவே வைரலாகி, பாகிஸ்தானின் நிவாரண மேலாண்மை மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது.



