Latest

இலோன் மாஸ்க்கிற்கு 1 ட்ரில்லியன் டாலர் சம்பள பேக்கேஜ் உறுதியானது; பங்குத்தாரர்கள் ஒப்புதல்

டெக்சஸ், நவம்பர்-7, அமெரிக்க மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான தெஸ்லாவின் (Tesla) தலைவர் இலோன் மாஸ்க்க்கு, உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது.

நேற்றைய இயக்குநர் வாரியக் கூட்டத்தில் பங்குதாரர்கள் மாஸ்க்கின் அப்புதியச் சம்பளத்திற்கு ஒப்புதல் வழங்கினர்.

சுமார் 75% பங்குதாரர்கள் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்துள்ளனர்.

இதையடுத்து, மாஸ்க் தெஸ்லாவின் சந்தை மதிப்பை தற்போதைய 1.4 டிரில்லியனிலிருந்து 8.5 டிரில்லியனாக உயர்த்த வேண்டியுள்ளது.

அதோடு, Robotaxis எனப்படும் தெஸ்லாவின் ஒரு மில்லியன் தானியங்கி கார்கள் வணிக ரீதியாக இயங்க வேண்டும் என்ற இலக்கையும் அவர் அடைய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில பெரிய முதலீட்டு நிறுவனங்கள் குறிப்பாக நோர்வே அரசாங்க செல்வ நிதி மற்றும் கலிஃபோர்னியா ஓய்வூதிய நிதி, இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.

இது மிகவும் அதிகப்படியான ஊதியம் என்றும், நிறுவன நிர்வாக சீர்கேடு என்றும் அவை விமர்சித்துள்ளன.

ஆனால், என்ன விமர்சனங்கள் வந்தாலும், இலோன் மாஸ்க் உண்மையிலேயே திறமைசாலி தான் என்றும் அவரில்லாமல் தெஸ்லாவே இல்லையென்றும் கூறி, அவரின் இந்த உலகச் சாதனை சம்பளத்தை வலைத்தளங்களில் மக்கள் ஆதரிக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!