பெய்ரூட், நவம்பர்-25, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகள் ஞாயிறன்று இஸ்ரேலை நோக்கி 250 ராக்கெட் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர்.
இதனால் Tel Aviv அருகே ஏராளமான வீடுகள் சேதமடைந்தன அல்லது தீப்பற்றிக் கொண்டன.
மத்திய பெய்ரூட்டில் 29 பேரை கொன்ற இஸ்ரேலின் இடைவிடா தாக்குதலுக்கு மறுநாள், பதிலடியாக ஹிஸ்புல்லா இந்த ராக்கெட்டுகளை ஏவியது.
பெய்ரூட்டின் தெற்கே ஹிஸ்புல்லா வசமுள்ள புறநகர் பகுதியையும் இஸ்ரேல் குறி வைத்து தாக்கியிருந்தது.
லெபனானில் போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்கா தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இஸ்ரேல் கடந்த 2 வாரங்களாகவே தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் போர் நிறுத்த பரிந்துரை, தற்போது இஸ்ரேலின் அங்கீகாரத்திற்குக் காத்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர்Josep Borrel கூறினார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, நேற்று தனது பாதுகாப்பு அமைச்சரைவைக் கூட்டத்தை நடத்தியிருப்பதால், விரைவில் போர் நிறுத்தம் மீதான முடிவு தெரிய வரலாம்.