
இஸ்லாமாபாத், நவம்பர்-12 – பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில், குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 27 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறினார்.
மாவட்ட நீதிமன்றத்தை தகர்ப்பது தான் அந்த மனித வெடிகுண்டின் இலக்கு; இதற்காக சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்த மர்ம நபரால் உள்ளே நுழைய முடியாமல் போகவே, வெளியே போலீஸ் கார் அருகே குண்டை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டதாக Mohsin Naqvi சொன்னார்.
தாக்குதலுக்குக் காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவர் என அவர் சூளுரைத்தார்.
இவ்வேளையில், ‘இந்தியா ஆதரவில் இயங்கி வரும்’ ஒரு தீவிரவாத கும்பலே அத்தாக்குதலை நடத்தியிருப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் Shebaz Sharif குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும் புது டெல்லி அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, அது ஓர் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என சாடியது.



