ஈப்போ, செப்டம்பர்-9 ஆடவரின் ஆணுறுப்பில் சிக்கிக் கொண்ட உலோக வளையத்தை (metal ring) வெட்டி எடுப்பதற்காக, தீயணைப்பு மீட்புத் துறை வரவழைக்கப்பட்ட சம்பவம் பேராக் ஈப்போவில் அரங்கேறியுள்ளது.
37 வயது அவ்வாடவர் இன்று காலை 9 மணியளவில் ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
உலோக வளையம் சற்று தடிமனாக இருந்ததால் அதனை வெளியே எடுக்க மருத்துவர்கள் போராடியும் பலனளிக்கவில்லை.
இதையடுத்து தீயணைப்பு மீட்புத் துறையின் உதவி நாடப்பட்டது.
பிரத்தியேகக் கருவியின் உதவியுடன் 15 நிமிடம் போராடி, ஆணுறுப்புக்கு எந்த சேதாரமும் வராமல் தீயணைப்புக் குழு வளையத்தை வெட்டி எடுத்தது.