ஈப்போ, நவம்பர் 5 – ஈப்போவில் அமைந்துள்ள சுங்கை பாரி ஆண்கள் இடைநிலைப்பள்ளியில் கடந்த அக்டோபர் 25ஆம் திகதி தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பெருநாள் கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடந்தேறியது.
மாணவர்களின் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளுடன் கோலகலமாக காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை, அப்பள்ளியின் இணைப்பாடத் துணைத்தலைமையாசிரியர் பேபிராணி முத்துசாமி தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கொண்டாட்டத்தை முன்னிட்டு மாணவர்களுக்குப் பாரம்பரிய உடை அணியும் போட்டி, வகுப்பறை அழகு படுத்தும் போட்டி, புதிர் போட்டி, கோலம் வரைதல், மின்னிலக்க மின் அட்டையை உருவாக்குதல் எனப் பல போட்டிகள் நடைபெற்று, இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டதாக ஆசிரியர் யோகேஸ்வரன் முனியாண்டி தெரிவித்தார்.
230 தமிழ் மாணவர்கள், 20 மலாய் மாணவர்கள் உட்படப் பள்ளியின் பல்லின ஆசிரியர்களுடன், நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நல்லுள்ளங்களும், இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.