
கோலாலாம்பூர், மார்ச்-26-MPP எனப்படும் குடியிருப்பாளர் பிரதிநிதித்துவ மன்ற உறுப்பினர்கள் இருவர், ஓர் உடம்புபிடி மையத்தில் பாதுகாப்பு பணம் கோரியதாகக் கூறி CCTV வீடியோ வைரலாகியுள்ளது.
அக்குற்றச்சாட்டு உண்மைதானா என்பதை விசாரிக்க உடனடியாக போலீஸில் புகாரளிக்குமாறு, கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ உத்தரவிட்டுள்ளார்.
ஒருவேளை அது உண்மையே என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட MPP உறுப்பினர்கள் எந்த சமரசமும் இல்லாமல் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என ஹானா எச்சரித்தார்.
பாதுகாப்பு பணம் வசூல் செய்வது அல்லது இடைத்தரகர் கலாச்சாரம் எதனையும் அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றார் அவர்.
இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள், DBKL-லின் கூட்டரசு பிரேதேச நெறிமுறை பிரிவு அல்லது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யிடம் அவற்றை வழங்க வேண்டும்.
இதன் மூலம் விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதை உறுதிச் செய்ய முடியும் என்றார் அவர்.



