
கோலாலம்பூர், ஜூலை-4 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அதிகாரிகள் உடல் பருமன் பிரச்னையைக் கொண்டிருந்தால், அடுத்தாண்டு முதல் அவர்களுக்குப் பதவி உயர்வுக் கிடையாது.
தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி அதனை அறிவித்துள்ளார். BMI உடல் பருமன் குறியீட்டில் 27 புள்ளிகளைத் தாண்டினால் 2026 ஜனவரி முதல் பதவி உயர்வை அனுபவிக்க முடியாது.
எனவே, எஞ்சியிருக்கும் இந்த 6 மாத காலத்திற்குள் உடல் எடையை குறைத்து விடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
MACC அதிகாரிகள் மத்தியில் உடல் பருமன் பிரச்னையைத் தீர்க்க இதுவே வழியென அசாம் பாக்கி சொன்னார்.
ஏற்கனவே போலீஸ் படையில் இது நடைமுறையில் உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். இப்புதிய உத்தரவின் சுற்றறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படும்.
அனைத்து MACC அலுவலகப் பணியாளர்களும் 3 மாதங்களுக்கு ஒரு மூறை அரசாங்க மருத்துவமனைகளில் சுகாதார பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.