Latestமலேசியா

உணவு சுவையில்லையாம்; சமையல்காரப் பெண்ணைக் குத்திக் கொன்ற வாடிக்கையாளர்

செபராங் பிறை, நவம்பர் 17- பினாங்கு, செபராங் பிறையில் ஓர் உணவகத்தில், உணவின் சுவை பிடிக்கவில்லை என வாடிக்கையாளர் புகாரளித்த சம்பவம் கடைசியில் உயிர் பலியில் முடிந்துள்ளது.

நேற்றிரவு 9 மணி வாக்கில் Lorong Bukit Juru-வில் உள்ள ஒரு தாய்லாந்து உணவகத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

வாக்குவாதம் தீவிரமடைந்ததில், 40 வயது மியன்மார் நாட்டு சமையல்காரப் பெண் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.

அவரது கணவர் மற்றும் மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் வாடிக்கையாளர், தனது சகோதரனை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபரும் அவரது சகோதரரும் கொலைக் குற்ற விசாரணைக்காகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

சாதாரண உணவு புகார், உயிரிழப்பாக மாறிய இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!