Latest

உணவு பொருட்களின் விலையேற்றம் குறித்து அறிக்கை விடுவதில் கவனம் தேவை – அமைச்சர் அர்மிஷான் வலியுறுத்து

கோலாலம்பூர், நவ 19 -உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறித்து பகிரங்க அறிக்கைகளை வெளியிடும் போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஜோகூர் இந்திய முஸ்லீம் தொழில் முனைவர் சங்கத்திற்கு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிசான் முகமட் அலி ( Armizan Mohd Ali ) ஆலோசனை தெரிவித்திருக்கிறார். உணவு விலைகளை உயர்த்துவதை நியாயப்படுத்த, தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு பற்றிய அரசாங்கத்தின் அறிவிப்பை உணவக உரிமையாளர்கள் உட்பட எந்த தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளவதை தாம் விரும்பவில்லை என்று அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு முன்பு அறிவித்ததைப் போன்று விலைகளை உயர்த்தப்போவதில்லை என்ற கடப்பாட்டில் தாங்கள் உறுதியாக இருக்கப்போவதாக நவம்பர் 14 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ஜோகூர் இந்திய முஸ்லீம் தொழில் முனைவர்கள் கூறியிருந்ததோடு எந்தவொரு அறிக்கை வெளியிடுவதற்கு முன் மிகவும் கவனமாக இருக்கப்போவதாக அவர்கள் வாக்குறுதி அளித்திருப்பதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அர்மிசான் தெரிவித்தார்.

மற்றொரு விலை உயர்வை அறிவித்தால் அவர்களை நாங்கள் உடனடியாக அழைப்போம். விலைகளை மறுஆய்வு செய்ய வேண்டிய தேவையை நாங்கள் புரிந்துகொண்டாலும் இதுபோன்ற நடவடிக்கை சட்டத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என் அர்மிசான் வலியுறுத்தினார். அடுத்த ஆண்டில் ஜோகூர் உட்பட நாடு முழுவதிலும் இந்திய முஸ்லீம் உணவகங்கள் 5 விழுக்காடு விலையை உயர்த்தாது என கடந்த செவ்வாய்க்கிழமையன்று மலேசிய இந்திய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. உள்நாடு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சுடன் நடந்த கலந்துரையாடலுக்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Presma எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் Jawahar Ali Taib Khan தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!