உத்தரப்பிரதேசம், செப்டம்பர் 30 – உத்தரப்பிரதேச மாநிலத்தில் 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர்ப்பலகையின் மீது இளைஞர் ஒருவர் ஏறி உடற்பயிற்சி செய்யும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு ரீல்ஸ் (reels) வெளியிட்டு வரும் நிலையில், சிலர் உயிரையும் பணயம் வைத்து காணொளிகளை வெளியிடுகின்றனர்.
அந்த வகையான காணொளிதான், இந்த இளைஞர் நெடுஞ்சாலை பெயர்ப்பலகையை ஜிம்மாக மாற்றியது.
இந்த காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.