கோலாலம்பூர், நவம்பர்-15 – முறையான உரிமம் இன்றி அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தியது மற்றும் ஆபாசப் பதிப்புகளை அச்சடித்தது என இரு குற்றச்சாட்டுகளின் பேரில், அச்சக நிறுவனமொன்றின் நிர்வாகி இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
எனினும், 44 Chin Chang Swee, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவ்விருக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணைக் கோரினார்.
ஜூலை 21-ஆம் தேதி Desa Tun Razak-கில் உள்ள தொழிற்சாலையில் அக்குற்றங்களைப் புரிந்ததாக உள்துறை அமைச்சால் அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
1948-ஆம் ஆண்டு அச்சு இயந்திரங்கள் மற்றும் பதிப்புச் சட்டத்தின் கீழ், அவ்விருக் குற்றங்களுக்கும் அதிகபட்சமாக தலா 20,000 ரிங்கிட் அபராதமும் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
அவ்வாடவரை 8,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவித்த நீதிமன்றம், ஜனவரி 6-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென அறிவித்தது.