
கூலிம், மார்ச்-8 – பெரும் செல்வந்தர்கள் சிலர் உலக ஊடகங்களையும், உள்ளூர் அரசியலையும் பாதிக்க முயற்சி செய்வதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
ஊழல் மற்றும் இதுபோன்ற சதி முயற்சிகள் நாட்டின் நிலைத்தன்மைக்கும் மக்களின் நம்பிக்கைக்கும் ஆபத்தாக உள்ளன என்றார் அவர்.
இந்த எச்சரிக்கை எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, மாறாக செல்வமும் அதிகாரமும் கொண்ட அனைவருக்கும் பொருந்தும் என அன்வார் தெளிவுபடுத்தினார்.
“மலேசியா ஊழலை எதிர்த்து உறுதியாக நிற்க வேண்டும்; கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது” என்று, கெடா, கூலிமில் நடைபெற்ற இஃப்தார் நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் பேசிய போது அவர் வலியுறுத்தினார்.
பணக்காரர்களின் செல்வாக்கு கட்டுப்பாட்டை மீறினால், ஜனநாயகத்தையும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக்கூடும் என்பதையே அன்வாரின் எச்சரிக்கை உணர்த்துகிறது.



