
ஷா ஆலாம், பிப்ரவரி-28-உலு சிலாங்கூர் , புக்கிட் பெருந்தோங்கில் ஒரு மளிகைக் கடை முன்பு அமர்ந்து கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த பெண்ணை குறிவைத்து இரு நபர்கள் வழிப்பறி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹெல்மெட் மற்றும் கருப்பு ஜாக்கெட் அணிந்த மர்ம நபர், பின்னாலிருந்து வந்து அப்பெண்ணின் கழுத்தில் இருந்த மஞ்சள் சங்கிலியை இழுத்து கிழித்தான்.
அதில் 3 தங்க நிற லாக்கெட்டுகள் தரையில் விழுந்தன.
அவன் உடனடியாக, கருப்பு Yamaha Y15ZR மோட்டார் சைக்கிளில் காத்திருந்த மற்றொரு நபருடன் அங்கிருந்து தப்பிச் சென்றான்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த காயமும், பொருள் இழப்பும் ஏற்படவில்லை.
போலீஸார், சந்தேக நபர்களைத் தேடி வருகின்றனர்.
தகவல் தெரிந்தவர்கள், உலு சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தை அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



