
வாஷிங்டன், மார்ச்-10-Hormuz நீரிணையில் எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுக்க முயன்றால், அமெரிக்கா “20 மடங்கு கடுமையாக” பதிலடி கொடுக்கும் என, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இன்றியமையாத எண்ணெய் போக்குவரத்தை சீண்ட நினைத்தால், ஈரானின் எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளைத் தாக்கி, அந்நாட்டை மீண்டும் கட்டமைக்க முடியாதபடி நிர்மூலமாக்கி விடுவோம் என, தனது Truth Social சமூக ஊடகத்தில் அவர் குறிப்பிட்டார்.
பிறகு “மரணம், தீ, கோபம்” தான் ஆட்சி செய்யும்” என வார்த்தைகளில் ட்ரம்ப் கடுமையைக் கொட்டியுள்ளார்.
ஆனால், அது நடைபெறாமலிருக்க வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக அவர் கூறிக்கொண்டார்.
இந்த எச்சரிக்கையானது, உண்மையில் Hormuz நீரிணையை அதிகமாக பயன்படுத்தும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவின் “பரிசு” எனவும், அந்த நடவடிக்கை பின்னர் பாராட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ட்ரம்ப்பின் எச்சரிக்கை, வளைகுடாவில் அதிகரித்து வரும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதோடு, உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கியக் குறுக்கு வழியாக விளங்கும் Hormuz நீரிணையை மீண்டும் கவனத்தின் மையமாகியுள்ளது.



