Latestமலேசியா

எத்தியோப்பியாவில் தனித்துவ வரவேற்பு; அன்வாரை அந்நாட்டுப் பிரதமரே சொந்தமாக காரில் அழைத்துச் சென்றார்

ஆடிஸ் அபாபா, நவம்பர் 19-ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பாவுக்கு அலுவல் பயணம் சென்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை, அந்நாட்டு பிரதமர் Dr Abiy Ahmed Ali வரவேற்ற விதம் அன்வாரையும் மலேசியப் பேராளர் குழுவையும் ஆச்சரியமூட்டியது.

Bole அனைத்துலக விமான நிலையம் சென்றிறங்கிய கையோடு அன்வாரை வரவேற்ற Dr Abiy, அவரே ஓட்டியக் காரில் பிரதமரை அழைத்துச் சென்றார்.

நேராக எத்தியோப்பியா அறிவியல் பொருட்காட்சி சாலைக்கு இருவரும் சென்றனர்.

எத்தியோப்பியாவின் நவீன வசதிக் கட்டமைப்பின் முன்னேற்றத்திற்கான சான்றாக அந்த பொருட்காட்சி சாலை விளங்குகிறது.

எத்தியோப்பியாவின் AI தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டு வியந்துபோனதாக, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அன்வார் குறிப்பிட்டார்.

எத்தியோப்பியாவின் பசுமைச் சூழலை பறைசாற்றும் ‘Friendship Park’ பூங்காவுக்கும் பிரதமர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தப் பூங்காவில் ஒரு மிருகக்காட்சிசாலை மற்றும் எத்தியோப்பிய தேசிய வரலாற்று ஆவணக் காப்பகம் ஆகியவை உள்ளன.

தவிர இது ஒரு ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு மையமாகவும் உள்ளது.

மலேசியா – எத்தியோப்பியா இடையிலான 60 ஆண்டு கால அரச தந்திர உறவுகளின் நினைவாக, 3-நாள் பயணமாக அன்வார் அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!