சிரம்பான், செப்டம்பர் 11 – சிரம்பான், தாமான் ராசா ஜெயாவில், Shell-லில் பணிபுரியும் பவித்திரன் என்பவர் எப்பொழுதும் கிராப்பில் இரண்டாக உணவு பொட்டலங்களை வாங்கும் பழக்கம் கொண்டவர்.
அப்படி வாங்கும் உணவுகளை எடுத்து வரும் கிராப் டைவர்களுடன், ஒரு உணவைப் பகிர்ந்து கொள்வது அவரின் வழக்கமாகும்.
இவ்வேளையில், மனதைக் கவரும் இவரின் செயலை கிராப் ரைடர் ஒருவர் சமூக வலைத்தளத்தின் வழி வெளிச்சத்துக் கொண்டு வந்துள்ளார்.
அந்த ரைடர் பவித்திரனிடமிருந்து ஆர்டர்களைப் பெற்றுள்ள நிலையில், இருமுறையும் கூடுதல் உணவுகளை அவருக்கு வழங்கியுள்ளதைக் காணொளியில் தெரிவித்திருக்கிறார்.
மனதைத் தொட்ட பவித்திரனின் செயலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் அதைக் காணொளியாகப் பதிவேற்றியிருக்கிறார்.
அக்காணொளியில், பவித்திரன் தனது செயலுக்கான காரணத்தையும் கூறியிருந்தார்.
டெலிவரி ரைடர்களின் கடின உழைப்பை பாராட்டும் விதமாக தன்னால் முடிந்த போதெல்லாம் கூடுதல் ஆர்டர் செய்து அவர்களுக்கு உணவுகளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
அவரது கருணைச் செயல் சமூக ஊடகங்களில் வைரலாகி, பவித்திரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.