தோக்யோ, அக்டோபர்-9 – ஆஸ்திரேலியாவிலிருந்து ஜப்பான் புறப்பட்ட விமானத்தில் திடீரென அனைத்துத் திரைகளிலும் ஆபாச படம் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த வாரம் சிட்னியிலிருந்து ஹனேடா நகருக்குப் பயணமான Qantas விமானத்தில் தான் அந்த கூத்து நடந்தது.
பயணிகளின் இருக்கைகளுக்கு முன் உள்ள குட்டித்திரைகளில் திடிரென ஆபாச படம் ஓடிய போது, குடும்பத்துடன் சென்றவர்களும் குழந்தைகளை வைத்திருந்தோரும் பெரும் தர்மசங்கடத்திற்கு ஆளாகினர்.
அவர்களால் படத்தை மாற்றவோ அல்லது திரையை அணைக்கவோ முடியாமல் போனது இன்னும் மோசமாகும்.
எனினும் சற்று நேரத்தில் சுதாகரித்துக் கொண்ட விமானப் பணியாளர்கள், குடும்பங்கள் பார்க்கத் தகுதியான படத்தை மாற்றி சலசலப்பை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய விமான நிறுவனம், தொழில்நுட்பக் கோளாறே அதற்குக் காரணமென கண்டறிந்தது.
ஏற்பட்ட அசௌகரியத்துக்கு Qantas நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.