
பில்போ, மே 22 – ஐரோப்பிய லீக் காற்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் டோட்டன்ஹாம் ஹோட்ஸ்புர் 1-0 என்ற
கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் குழுவை வென்றது. இந்த வெற்றியின் மூலம் 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஐரோப்பிய கிண்ணத்தை டோட்டன்ஹாம் ஹோட்ஸ்புர் அணி
வென்று சாதனை படைத்துள்ளது. முற்பகுதி ஆட்டத்தின் 42 ஆவது நிமிடத்தில் Brennan Johnson அந்த அணிக்கான வெற்றி கோலை அடித்தார். 2008 ஆம் ஆண்டு லீக் கிண்ணத்தை வென்ற
பிறகு டோட்டன்ஹாம் ஹோட்ஸ்புர் குழுவின் முதல் வெற்றி இதுவாகும்.
அதே வேளையில் இந்த சீசனில் அவர்கள் மென்செஸ்டர் யுனைடென் அணியை வீழ்த்தியது இது நான்காவது முறையாகும். இந்த வெற்றி டோட்டன்ஹாம் ஹோட்ஸ்புர் குழுவுக்கு அடுத்த பருவத்திற்கான சாம்பியன்ஸ் லீக் தகுதிக்கான வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது. இது 21 தோல்விகளுக்குப் பிறகு பிரீமியர் லீக் வெளியேற்ற மண்டலத்திற்கு சற்று மேலே உள்ள ஒரு அணிக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக இது கருதப்படுகிறது.