
பாரீஸ், மார்ச்-7 – கூகுள் தனது பிரபலமான தேடல் இயந்திரத்தில் விரைவிலேயே AI அம்சத்தைப் பொருத்துகிறது.
இதன் மூலம் பயனர்கள் கணினியால் கட்டுப்படுத்தப்படாத இயற்கையான மொழியில் கேள்வி கேட்கவும், தொடர்புடைய உள்ளடக்கத்திற்கான இணைப்புகளுடன் முழுமையான பதிலைப் பெறவும் முடியும்.
பயனர்களின் திரைகளில், இது ‘அனைத்தும்’, ‘செய்திகள்’, ‘படங்கள்’ போன்ற மெனுவின் இடதுபுறத்தில் “AI Mode”என்ற பெயரில் ஒரு புதியத் தேர்வாக இடம்பெறும்.
இது இயற்கையான மொழியில் வடிவமைக்கப்பட்ட கேள்விகளுக்கு விரிவான பதில்களைப் பெற உதவுகிறது.
உதாரணத்திற்கு, ஆழமான ஆய்வு அல்லது ஒப்பீடு தேவைப்படும் கேள்விகளுக்காக இந்த தீர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இப்புதிய AI Mode பயன்முறையை ஆய்வகங்களில் சோதிக்க, Google One AI Premium சந்தாதாரர்களுக்கு சோதனை அடிப்படையில் மட்டுமே இது கிடைக்கிறது.
பின்னர் படிப்படியாக இப்புதிய அம்சத்தை அனைவருக்கும் கூகுள் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.