Latestமலேசியா

கஜாங்கில் முன்னாள் காதலி மற்றும் தாயார் மீது பெட்ரோல் ஊற்றிய ஆடவன் கைது

காஜாங், பிப் 3 – பண்டார் டெக்னோலோஜி காஜாங்கில் உள்ள ஒரு வீட்டில் ஆடவன் ஒருவன் தனது முன்னாள் காதலி மற்றும் அவரது தாயார் மீது பெட்ரோல் ஊற்றி, ஒரு காருக்கும் தீவைத்ததோடு தனது முன்னாள் காதலியின் செல்லக் கோழியை அரிவாளால் அறுத்துள்ளான்.

40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணை மாலை மணி 3.20 அளவில் அவரது தாயார் எழுப்பி, வீட்டின் முன் உள்ள கார்நிறுத்தும் இடத்தில் அந்த ஆடவன் இருப்பதாகக் கூறியதாகத் தெரிகிறது.

அந்த பெண்ணின் புரோட்டோன் சாகா காரின் காதவைத் திறந்து அவரது உடமைகளை அகற்றி குப்பைப் பைகளில் போட்டு அதற்கு அவன் தீவைத்துள்ளான்.

சம்பந்தப்பட்ட அந்த ஆடவனிடம் அப்பெண் பேச முயன்றபோதிலும் , அவன் திடீரென்று அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றிய பின் , தன்னிடமிருந்த லைட்டரைக் காட்டி மிரட்டியதோடு அவரது இரண்டு கோழிகளில் ஒன்றை எடுத்து, தன்னுடன் கொண்டுவந்த கத்தியால் அறுத்து கொன்றுள்ளான்.

அதன் பிறகு அவன் அந்த பெண்ணின் கார் மீது பெட்ரோல் ஊற்றி அதற்கு தீவைத்ததால் அப்பெண் தலைமுடி உட்பட உடலில் பல இடங்களில் தீக்காயத்திற்கு உள்ளானார்.

மேலும் அப்பெண்ணின் மடிக்கணினியையும் அந்த ஆடவன் சாலையோரத்தில் வீசியுள்ளான். அந்த நபரின் இந்த தாக்குதல் அவ்வீட்டில் இருந்த சிசிடிவி ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

அவ்விரு பெண்களும் இச்சம்பவம் குறித்து காஜாங் போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து அன்றைய தினமே சந்தேகப் பேர்வழி பண்டார் சவ்ஜனா புத்ராவிலுள்ள தனது அண்டை வீட்டுக்காரரின் அடுக்கு மாடி வீட்டிற்கு பின்னால் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!