கோலாலம்பூர், ஜன 7 – தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC கடந்த
2024 ஆம் ஆண்டில் 3.1 பில்லியனுக்கும் அதிகமான மோசடி அழைப்புகளை வெற்றிகரமாகத் தடுத்து, கிட்டத்தட்ட 12,000 புகார்களை செயலாக்கியது. கடந்த ஏழு நாட்களில் 4,699 சமூக ஊடக இடுகைகளை பல்வேறு சமூக ஊடக தளங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி ஆணையத்தினால் அந்த சமூக ஊடக இடுக்கைகள் பதிவிடப்பட்டவை என தொடர்பு அமைச்சர் பாமி பாட்சில் தெரிவித்தார். மொத்தமுள்ள 4,699 பதிவுகளில் 72 விழுக்காடு ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான இடுகைகள் என்றும், 14 விழுக்காடு மோசடி தொடர்பான இடுகைகள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த இரண்டு சிக்கல்கள் தொடர்பான இடுகைகள் ஏற்கனவே சுமார் 86 விழுக்காடாக உள்ளன. சட்டவிரோதமாகக் கருதப்படும் இடுகைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து ஒழுங்குபடுத்துவோம் என்று அவர் இன்று இரண்டாவது அனைத்துக ஒழுங்குமுறை மாநாட்டில் (IRC 2025) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இணைய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், பாதுகாப்பான இலக்கவியல் சூழலை வளர்ப்பதற்கும் மலேசியாவின் உறுதிப்பாட்டை காட்டும் ஒரு மைல்கல் இதுவென அவர் சுட்டிக்காட்டினார். இரண்டு நாள் IRC 2015 மாநாட்டில் பங்கேற்ற ஆசியான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மலேசியா தனது இலக்கை உறுதி செய்வதாக தெரிவித்தார். மக்கள் தொடர்ந்து நிலையான தொழில்நுட்ப வளர்ச்சியை அடைவதை உறுதி செய்வதற்காக, தொழில்நுட்ப முன்னேற்றங்களை வலுவான விதிமுறைகளுடன் சமநிலைப்படுத்துவது இன்றியமையாதது என்றார். தொழில்நுட்பம் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், பயனர்களைப் பாதுகாக்கும் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் விதிமுறைகளால் அது பூர்த்தி செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் என பாமி வலியுறுத்தினார்.