Latestமலேசியா

கடன் வசூலிப்பை எளிதாக்கும் PTPTN; சிரமப்படுவோருக்கும் உரிய உதவிகள்

புத்ராஜெயா, டிசம்பர்-1,தேசிய உயர் கல்வி நிதிக்கழகமான PTPTN, 2021-2025 வரைக்குமான தனது வியூகத் திட்டத்தின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளது.

அவ்வியூகத் திட்டத்தின் மூன்றாவது அம்சம், PTPTN கடன் வசூலிப்பு மேலும் ஆக்கப்பூர்வமாக இருப்பதை உறுதிச் செய்வதாகும்.

அதாவது, PTPTN கடனாளிகளுக்கு போதிய ஆதரவும் மூலாதாரமும் கிடைப்பதும் முக்கியமாகும்.

அதற்கு ஏதுவாக, கடனைத் திருப்பிச் செலுத்துவதை எளிதாக்க PTPTN பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அவற்றில் கீழ்கண்ட 5 வழிமுறைகள் முதன்மையானவை;

PTPTN சேவை முகப்புகளுக்கு நேரடியாகச் சென்று கடனைத் திருப்பிச் செலுத்துவது, கைப்பேசியில் myPTPTN செயலி வாயிலாக எளிதான முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துவது, PTPTN-னின் அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கங்களில் கடனைச் செலுத்துவதும் அவற்றிலடங்கும்.

கடனாளிகளின் மாதச் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்வது, direct debit முறையில் தத்தம் வங்கிக் கணக்கிலிருந்து மாதந்தோறும் நேரடியாக தவணைப் பணம் வெட்டப்படுவது ஆகியவை ஏனைய வழிமுறைகளாகும்.

இது தவிர்த்து, EPF சேமிப்பு வாயிலாகவும் அவர்கள் தங்களது PTPTN கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும்.

கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கும் கடனாளிகளின் தேவைக்காக சில வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.

படிப்பு முடிந்த 12 மாதங்களுக்குப் பிறகு கடனை அடைக்கத் தொடங்குவது, வேலையில்லாதவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதை 24 மாதங்கள் வரை ஒத்தி வைப்பது, குறைந்தபட்சம் 50 ரிங்கிட் என்ற தொகையில் மாத தவணைப் பணத்தை மறுஅட்டவணையிடுவது போன்றவையும் அவற்றிலடங்கும்.

மேல் விவரங்களுக்கு PTPTN வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!