Latestமலேசியா

கட்டுமான கிரேனில் மயக்கம் அடைந்ததாக கருதப்பட்ட ஆடவர் தூங்கிக் கொண்டிருந்தார்

கட்டுமான கிரேனில் மயக்கம் அடைந்ததாக கருதப்பட்ட ஆடவர் தூங்கிக்
கொண்டிருந்தார்

கூச்சிங், பிப்ரவரி 13 –

கூச்சிங் , Tabuan Jayaவில் Tunku Putra Help பள்ளியில்54 மீட்டர் உயர்ம் கொண்ட கட்டுமான கிரேனுக்குள்மயக்கமடைந்ததாக அஞ்சப்பட்ட ஆடவர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார்.

தபுவான் ஜெயா தீயணைப்பு மற்றும்மீட்பு நிலையத்திற்கு இரவு மணி 9.16க்கு கிடைத்த அவசர அழைப்பில்ஒரு கட்டுமானத் தொழிலாளி இன்னும் கிரேனுக்குள் இருப்பதாக நம்பப்படுவதாகவும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக சென்றடைந்தனர். அந்த கிரேனில் இருந்த 41 வயதுடைய வால் ஜாவி கட்டுமான தளமேலாளரைத் தொடர்பு கொள்ளத் தவறியதால் அவர் மயக்கம் அடைந்திருக்கலாம் என தொடக்கத்தில் அஞ்சப்பட்டதாக சரவா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அந்த ஆடவர் மாலை 5 மணிக்கு கிரேனில் இருந்து இறங்க வேண்டியிருந்ததாகவும் ஆனால் தீயணைப்புப் படையினர் உதவிக்கு அழைக்கப்படுவதற்கு முன்பு அவரை தொலைபேசி மற்றும் வாக்கி டாக்கி மூலம் தொடர்பு கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லையென கூறப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபின்னர் இரண்டு பணியாளர்கள் 17 மீட்டர் உயரத்தில் உள்ள முதல் தளத்தை அடைந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் இரவு 11.46 மணிக்கு 54 ஆவது மீட்டர் தளத்தை அடைந்தபோது சம்பந்தப்பட்ட நபர் பாதுகாப்பாக கிரேனுக்குள் இருந்ததைக் கண்டனர்.

கட்டுமான நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு தெரியாமல் கிரேனில் இரவு தங்க அந்த தொழிலாளி திட்டமிட்டதால் தகவல் தொடர்பில் ஏற்பட்ட தவறான புரிதலே இச்சம்பவத்திற்கு காரணம் என தெரியவந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!