வாஷிங்டன், நவம்பர்-20,
அமெரிக்க அதிபராகவுள்ள டோனல்ட் டிரம்ப், WWE மல்யுத்த உலகின் முன்னாள் தலைமை செயலதிகாரியான (CEO) லிண்டா மெக்மஹோனை (Linda McMohan), கல்வி அமைச்சராக பெயர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபரானதும் அகற்றப் போவதாகக் கூறிய துறைக்கே, அந்த கோடிஸ்வர பெண்ணை டிரம்ப் தலைமைப் பதவிக்கு நியமித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெக்மஹோன், ஏற்கனவே 2 முறை செனட் சபைக்குப் போட்டியிட்டு தோல்விக் கண்டவராவார்.
பெற்றோர் உரிமைப் போராட்டவாதியென மெக்மஹோனை வருணித்த டிரம்ப், கல்வியை மாநில சுயாட்சிக்கு மாற்றும் தமது திட்டத்தை அவர் திறம்பட செயல்படுத்துவார் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
கல்வி வாரியங்களிலும் பல்கலைக்கழக அறக்கட்டளைகளிலும் பதவி வகித்துள்ள அனுபவத்தைக் கொண்டிருந்தாலும், கல்வி வட்டாரங்களில் அவ்வளவாக அறியப்படாத முகமாகவே மெக்மஹோன் விளங்குகிறார்.
எனவே, டிரம்ப் நடைமுறைப்படுத்த விரும்பும் கல்வித் திட்டங்களைச் செயலாக்குவதில் மெக்மஹோன் சவாலை எதிர்நோக்கலாமெனக் கூறப்படுகிறது.