தம்போய், நவம்பர்-19, ஜோகூர் ம.இ.கா ஏற்பாட்டில் Bangsa Johor எனும் ஜோகூர் மக்கள் தீபாவளிக் கொண்டாட்டம் ஜோகூர் பாரு, தம்போயில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதில் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் கா’சி, இந்தியர்களின் பாரம்பரிய உடையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
தீபாவளி ஒரு பண்டிகை மட்டுமல்ல; ஜோகூர் மக்களை ஒன்றிணைக்கும் வலுவான ஒற்றுமையின் அடையாளமென, தமதுரையில் அவர் சொன்னார்.
நம்பிக்கைகள் வெவ்வேறானாலும், கலைக் கலாச்சாரங்கள் வெவ்வேறானாலும், ஒருவருக்கொருவர் உதவியாக, ஒன்றுபட்ட சிறந்த எதிர்காலத் தலைமுறையை உருவாக்க இது போன்ற நிகழ்வுகள் துணைபுரியுமென டத்தோ ஓன் கூறினார்.
ஜோகூர் ம.இ.கா தொடர்புக் குழுத் தலைவரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான ரவின் குமார் கிருஷ்ணசாமி, ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் உள்ளிட்டவர்களும் அதில் பங்கேற்றனர்.
திரளாகப் பங்கேற்ற மக்களுக்கு நமது பாரம்பரிய உணவுகள் பரிமாற்றப்பட்ட வேளை, இந்தியக் கலைக் கலாச்சார நடனங்களும் அரங்கேற்றப்பட்டன.
மாநில ம.இ.காவின் முன்னோடிகளுக்கும் அதில் சிறப்பு செய்யப்பட்டது.