Latestமலேசியா

காசநோய்க்கான சிகிச்சையைத் தொடரத் தவறிய சண்டாகான் ஆடவருக்கு 6 மாத சிறை

காசநோய்க்கான சிகிச்சையைத் தொடரத் தவறிய சண்டாகான் ஆடவருக்கு 6 மாத சிறை

சண்டாகான், பிப்ரவரி-13,

TB எனப்படும் காசநோய்க்கான சிகிச்சையைத் தொடரத் தவறியதற்காக, சபா, சண்டாகானில் ஓர் ஆடவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1988-ஆம் ஆண்டு தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டத்தின் கீழ் TB சிகிச்சையைத் தொடருமாறு விதிக்கப்பட்ட உத்தரவை மீறியதை, 30 வயது Almahzar Madin மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

பொது இடங்களில் மக்களுக்கு நோய்தொற்றக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தியதாகவும், சுகாதார அதிகாரிகளின் உத்தரவை மீறியதாகவும் அந்நபர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

உத்தரவின் படி, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு TB சிகிச்சையைத் தொடர வேண்டுமென்றும் அவ்வாடவர் பணிக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!