Latestமலேசியா

காமன்வெல்த் சட்ட அமைப்புக்குத் தலைவரான ஸ்டீவன் திரு; மலேசியாவுக்குப் பெருமை

கோலாலம்பூர், பிப்ரவரி-5 – நாட்டின் பிரபல வழக்கறிஞர் ஸ்டீவன் திரு, 2025-2027 தவணைக்கான காமன்வெல்த் நாடுகளின் சட்ட அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 1 முதல் அவரின் நியமனம் அமுலுக்கு வந்துள்ளது.

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான திரு, 2019 முதலே CLA எனும் அவ்வமைப்பில் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சட்டத் துறையில் இருக்கும் பரந்த அனுபவம் அவரை இன்று அப்பொறுப்புக்கு உயர்த்தியுள்ளது.

அதுவும் காமன்வெல்த் அளவில் உயரியப் பொறுப்பை அடைந்து நமக்கெல்லாம் திரு பெருமை சேர்த்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!