Latestஉலகம்மலேசியா

காயமடைந்த பாலஸ்தீனர்களுக்கு உதவும் வழிமுறைகளை மலேசியா மறு ஆய்வு செய்யும் – பிரதமர் தகவல்

கெய்ரோ, நவம்பர்-13 – இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்த பாஸ்தீன மக்களுக்கு தரமான சிகிச்சைகள் கிடைக்க ஏதுவாக மலேசியா தொடர்ந்து உதவி வரும்.

எனினும், அவ்வுதவி மேலும் ஆக்ககரமானதாக இருப்பதை உறுதிச் செய்ய, அதன் வழிமுறைகள் மறு ஆய்வு செய்யப்படுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

செலவினங்கள் அதிகளவில் உயராதிருக்கும் வகையில் உதவுவது குறித்து தற்காப்பு அமைச்சுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

எகிப்துக்கு தான் மேற்கொண்ட பயணத்தின் இறுதியில் டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.

இதற்கு முன் இஸ்ரேலியத் தாக்குதலில் காசாவில் காயமடைந்த 41 பாலஸ்தீனர்கள், மனிதநேய அடிப்படையில் சிகிச்சைக்காக மலேசியா கொண்டு வரப்பட்டனர்.

கோலாலம்பூர், துவாங்கு மீசான் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 86 பேரும் உடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!