Latestமலேசியா

காற்பந்து விளையாட்டின் நுணுக்கங்களைப் புத்தகமாக வெளியிட்ட, 36 வருடம் அனுபவம் கொண்ட காற்பந்து பயிற்சியாளர் ராதா கிருஷ்ணன்

கால்பந்து விளையாட்டுத் துறையின் நுணுக்கங்களையும் நுண்ணறிவுகளையும் இளம் தலைமுறையினர் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஒரு வழிகாட்டி புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது.

உள்நாட்டில் மட்டுமல்ல அனைத்துலக ரீதியிலும் காற்பந்து துறையில் பல்வேறு முத்திரைகளையும் பல காற்பந்து ஜம்பவான்களையும் உருவாக்கிய பயிற்றுநர் ராதா கிருஷ்ணன் நடேசன்தான் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்ட புத்தகத்தின் வாயிலாக காற்பந்து விளையாட்டின் விதிமுறைகள், வழிமுறைகள், மற்றும் திறன்கள் போன்றவை வளர்த்துக்கொள்ள இயலும் என விவரிக்கிறார் இவர்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கு கிடைத்த அனுபவங்கள், தான் கற்றறிந்த தகவல்கள் அடிப்படையில் தீவிரமாக ஆராய்ந்து தனது புத்தகத்தை எழுதியதாகத் தெரிவித்தார்.

முதலில் கால்பந்து விளையாட்டாளராகவும், அதன் பிறகு பயிற்றுநராகவும் சேவையாற்றியுள்ளார்.

செந்தூல் பாசாரை பூர்விகமாகக் கொண்ட இவர், அங்கு மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தவே கால்பந்து விளையாட்டை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளார்.

அதற்காக, கடந்த 2000ஆம் ஆண்டு, இளையோர் கால்பந்து அகாடமியை தொடங்கியவர், இதுவரை 27,000க்கு மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.

தற்போது அவரின் கீழ் 700 பேர் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

தோட்டங்கள், கிராமங்கள் போன்ற உட்புற பகுதிகளுக்கும் சென்று கால்பந்து பயிற்சியை வழங்கி கொண்டிருக்கிறார் இவர்.

இவர் கால்பந்து துறையில் வைத்திருக்கும் திறனையும் அனுபவங்களையும் அங்கிகரித்து உப்சி பல்கலைக்கழகம் இவருக்கு, முழு உபகாரச் சம்பளத்தை வழங்கி sports science and coaching துறையில் முனைவர் பட்டத்தைத் தொடர வழிவகுத்துள்ளது.

இதனிடையே, இளம் தலைமுறையினர் கால்பந்து துறையில் முன்னேற வேண்டும் எனும் உன்னத நோக்கில் இதுவரை 7 தமிழ்ப்பள்ளிகள் உட்பட 13 பள்ளிகளுக்கு இந்தப் புத்தகத்தை இலவசமாக வழங்கியிருக்கிறார்.

எனினும், எல்லா பள்ளிக்கும் தனது புத்தகம் போய் கைசேர வேண்டுமெனில், இளையோர் தான் எழுதிய புத்தக்கத்தை வாங்கி மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கு அன்பளிக்க வழக்க வேண்டும் என்று அவர், கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!