லங்காவி, செப்டம்பர்-24 – கெடா, லங்காவியில் காலடியில் விழுந்த கைப்பேசியை எடுக்க முயன்ற காரோட்டி, தவறுதலாக எண்ணெயை அழுத்தியதால் கார், கடை வரிசையை மோதியது.
அச்சம்பவம் Jalan Pantai Chenang-கில் நேற்று நண்பகலில் நிகழ்ந்தது.
அதில் பாதிக்கப்பட்டது, Lorong Sultan Abdul Hamid 2-ல் உள்ள துணிக்கடையாகும்.
துணிகளுக்கு மத்தியில் அந்த வெள்ளை நிற Perodua Axia கார் நிற்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
காரோட்டி ஓர் உள்நாட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் அதில் எவருக்கும் காயமேற்படவில்லை.