Latestமலேசியா

கினாபாலு மலையில் காயமடைந்த தைவான் நாட்டு ஆடவர்; காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பு

ரானாவ், அக்டோபர்-7 – சபா, கினாபாலு மலையிலிருந்து இறங்கும் போது காயமடைந்த தைவான் நாட்டு மலையேறியை, தீயணைப்பு – மீட்புப் படையினர் காப்பாற்றிக் கீழே கொண்டு வந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை மலையிறங்கும் போது 44 வயது அவ்வாடவருக்குக் காலில் காயமேற்பட்டது.

இடது கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டு அவரால் நடக்க முடியாமல் போகவே, மலைக்காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தீயணைப்பு-மீட்புக் குழுவும் வந்துசேர, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, stretcher மூலம் கீழே கொண்டு வரப்பட்டார்.

பிற்பகல் 3 மணியளவில் மலையடிவாரம் வந்ததும், அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!