Latest

கிள்ளானில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம்; பலியான இளைஞரின் மார்பில் 5 துப்பாக்கிச் சூட்டு காயங்கள்

கிள்ளான், டிசம்பர் 2 – அண்மையில், கிள்ளான் Taman Mesra Indah பகுதியில், வாகனமொன்றில் 26 வயதுடைய இளைஞர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில் இறந்தவரின் மார்பில் 5 துப்பாக்கி சூட்டு காயங்கள் இருந்ததும் அவரை அருகிலிருந்தவாறே துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்பதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

தற்பொழுது போலீசார் சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் ‘Datuk Shazeli Kahar’ கூறியுள்ளார்.

இந்நிலையில் மரணமடைந்தவருக்கு முந்தைய போதைப்பொருள் குற்றப் பதிவுகள் இருந்தது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கும் கடந்த மாதம் புக்கிட் திங்கியில் நடந்த பெட்ரோல் நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!